செடியொன்று நட்டு
நீர்விட்டு வளர்த்து
காத்திருந்தேன் பூக்களுக்காய்
பூ ஒன்று மலர முன்
மொட்டொன்று வந்தது.
நாளிரண்டு ஆனதும் தன்
வண்ண இதழ் விரித்து
எனை பார்த்து புன்னகைத்து.........
அதன் புன்னகை
கவர்ந்தது என்னை.
நான் மரணித்த போது தான்
புரிந்துகொண்டேன் உண்மையை
நான் நட்ட பூக்கள்
அனைத்தும் என்
கல்லறை தோட்டத்தை
அல்லங்கரிக்கவென்பதை..........
நா வேற தனியா சொல்லனுமா பாஸ்!
ReplyDeleteஅட்டகாசம்!!
உங்கள் வலைபூவும் மிகவும் அருமை
ReplyDeleteசொல்ல வார்த்தையில்லை அருமை
ReplyDelete