செடியொன்று நட்டு
நீர்விட்டு வளர்த்து
காத்திருந்தேன் பூக்களுக்காய்
பூ ஒன்று மலர முன்
மொட்டொன்று வந்தது.
நாளிரண்டு ஆனதும் தன்
வண்ண இதழ் விரித்து
எனை பார்த்து புன்னகைத்து.........
அதன் புன்னகை
கவர்ந்தது என்னை.
நான் மரணித்த போது தான்
புரிந்துகொண்டேன் உண்மையை
நான் நட்ட பூக்கள்
அனைத்தும் என்
கல்லறை தோட்டத்தை
அல்லங்கரிக்கவென்பதை..........
Monday, July 27, 2009
ஈரப்பார்வையால்...........
நீரில்
நெடுநாட்கள் கிடந்தாலும்
கருங்கல் கரைவதில்லை
ஓராயிரம் பார்வைகளில்
மூல்கியும் முன்பெல்லாம் என்
மனம் கரைந்ததில்லை
ஆனால்.................?
இன்று என்ன ஓர் அதிசயம்?
ஒரே வினாடியில்
உன் ஈரப்பார்வையில்
என் மனம்
உப்பாய் கரைந்ததே..............
நெடுநாட்கள் கிடந்தாலும்
கருங்கல் கரைவதில்லை
ஓராயிரம் பார்வைகளில்
மூல்கியும் முன்பெல்லாம் என்
மனம் கரைந்ததில்லை
ஆனால்.................?
இன்று என்ன ஓர் அதிசயம்?
ஒரே வினாடியில்
உன் ஈரப்பார்வையில்
என் மனம்
உப்பாய் கரைந்ததே..............
Wednesday, July 22, 2009
நண்பன் கிடைத்திட
என்ன தவம் செய்தேன்
உன் போல் நண்பன் கிடைத்திட
தாய் தருத்தரிக்கு வரை
தந்தை கடமையாற்றும் வரை
காதலன் காதலிக்கும் வரை
நண்பனோ வாழ்வின் எல்லை வரை
பலநூறு மயில் தண்டி
இருந்தாலும்
இதயம் கொண்டநட்பு
நம் அருகிலே
அரவணைக்கும் அன்னையும்
அன்பு செய்யும் தந்தையிலும்
நண்பர் உயர்ந்தவர்
அதிலும் நான் உன்னை
நண்பனை அடைய
என்ன தவம் செய்தேனோ
செல்போனின் ஒவ்வொரு
செல்லச் சினுங்கலிலும்
நான் உன் அழைப்பை
பிரித்தினம் கண்டேன்
நாளோரி மேனியும்
பொழுதொரு வண்ணமும்
உன் பேச்சை ரசித்தேன்
உன்னை அருகில் உணர்ந்தேன்
வாய் சொன்னது தூரத்தை
மனம் சொன்னது
உன் அருகாமையை
உன் போல் நண்பன் கிடைத்திட
தாய் தருத்தரிக்கு வரை
தந்தை கடமையாற்றும் வரை
காதலன் காதலிக்கும் வரை
நண்பனோ வாழ்வின் எல்லை வரை
பலநூறு மயில் தண்டி
இருந்தாலும்
இதயம் கொண்டநட்பு
நம் அருகிலே
அரவணைக்கும் அன்னையும்
அன்பு செய்யும் தந்தையிலும்
நண்பர் உயர்ந்தவர்
அதிலும் நான் உன்னை
நண்பனை அடைய
என்ன தவம் செய்தேனோ
செல்போனின் ஒவ்வொரு
செல்லச் சினுங்கலிலும்
நான் உன் அழைப்பை
பிரித்தினம் கண்டேன்
நாளோரி மேனியும்
பொழுதொரு வண்ணமும்
உன் பேச்சை ரசித்தேன்
உன்னை அருகில் உணர்ந்தேன்
வாய் சொன்னது தூரத்தை
மனம் சொன்னது
உன் அருகாமையை
நட்பு என்பது
அன்பு என்பது அண்மையில்
பாசம் என்பது பக்கத்தில்
காதல் என்பது காத்திருக்கும் வரை
நேசம் என்பது நெருங்கும் வரை
நட்பு என்பது நனவு கனவு
இரண்டும் இருக்கும் வரை.......................
பாசம் என்பது பக்கத்தில்
காதல் என்பது காத்திருக்கும் வரை
நேசம் என்பது நெருங்கும் வரை
நட்பு என்பது நனவு கனவு
இரண்டும் இருக்கும் வரை.......................
Thursday, July 16, 2009
என்னிடமே விட்டுவிடு
வானமே !
உனக்கென்ன ஆயிற்று
சூரியனை ஏன் மறைக்கிறாய் கருமுகிலாய்
இடி மின்னலே !
மனிதரை ஏன் பயமுறுத்துகின்றாய்
மழையே !
மண்ணில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தாதே
இயற்கையே !
இவ்வளவும் எதற்காக
என் சோகங்கள்
என்னிடம்தானே உள்ளன
உன்னிடம் சொல்லவே இல்லையே
என் சோகங்களை என்னிடமே விட்டுவிடு
உனக்கென்ன ஆயிற்று
சூரியனை ஏன் மறைக்கிறாய் கருமுகிலாய்
இடி மின்னலே !
மனிதரை ஏன் பயமுறுத்துகின்றாய்
மழையே !
மண்ணில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தாதே
இயற்கையே !
இவ்வளவும் எதற்காக
என் சோகங்கள்
என்னிடம்தானே உள்ளன
உன்னிடம் சொல்லவே இல்லையே
என் சோகங்களை என்னிடமே விட்டுவிடு
Subscribe to:
Posts (Atom)