Monday, July 11, 2011

மண்ணுயிர் காக்க மன்னவனே வாராய்

வையத்தை வனைந்த குயவன்
மனிதனையும் வைத்தான் வையத்துள்
மானுடத்தின் மான்பினால் மாசு படிந்தது
மீட்புக்கு மனுவுரு மூச்சானது.

வையத்துள் மடிந்திடும் மானுடமே
நீ வித்திடும் நிலை எம் மனங்கள் கருகுதே
மெருகிப் போன உன் பிறப்பு இறப்பு ஆதார பொக்கிஷங்கள்
சாம்பலாய் கலங்கிய கடலில் கரைந்து
கரையை அடைய அமைதியான உன் காத்திருப்பு

மீளாத மீள்குடியேற்றம்
காணாத கண்துடைப்புகள்
கிடைக்காத ஏக்கச் செடிகள்
மலராத வறண்ட வசந்தங்கள்
கொண்டு ஆடுகின்ற கொண்டாட்டங்கள்

குயவன் தன் இயந்திரத்தை
சுற்றும் போது களிமண் பனை.
ஆனால்......
இறைவன் எத்தனை தரம்
சுற்றினாலும் உலகத்தை
மனிதன் களிமண்ணே என்றும்.