நான் வாழும் நாட்களின்
காலங்களில் கடவுளின்
வரங்களை அனுபவிக்கிறேன்।
இறைவன் லீலைகளையும்
அனுபவிக்கிறேன் இன்பமாகவே।
உடன் பிறப்புகளையோ
உயிரளித்தவரையோ உயிருடன்
விட்டு வைக்காவிட்டாலும்
உலகில் தோன்றிய உயிர்கள்
என்றும் என் உறவுகளே।
இறைவன் எனக்கு அளிக்காது
விட்டாலும் உறவுகளை
நானாக உருவாக்கும்
யுக்திழயக் கற்றுக் கொண்டேன்।
புதிய உறவுகளை
உருவாக்கும் பணி இலகுவானாலும்,
அவை நிலைக்க செய்வது
கடினமே।
நான் ஒரு உறவை நினைக்க
கிடைக்கும் உறவுகளோ
என்னிடம் பிறிதொன்றை
எண்ணுவதேன்?
உண்மையான அன்பை
உறவுகளில் காணவில்லையே
ஏன்?
களங்கமில்லா அன்பை
உணரத் தெரியவில்லையா
அப்பா, அண்ணா, தம்பி என
நான் உணர்வுபூர்வமாய் எண்ணினாலும்
ஏன் ஆண்களால்
முடிவதில்லை அவை?
தன்வீட்டுப் பெண் தான்
பிள்ளையா உனக்கு
மற்றவர் வெறும் போகப்
பொருளா மானிடா?
பெண்கள் அனைவரும் என்றும்
பெண்களே என்று
புரிந்து கொள்வாயா
ஆணினமே......
இது தான் பெண்களுக்கு
கடவுளிட்ட வரமா?
காலங்களில் கடவுளின்
வரங்களை அனுபவிக்கிறேன்।
இறைவன் லீலைகளையும்
அனுபவிக்கிறேன் இன்பமாகவே।
உடன் பிறப்புகளையோ
உயிரளித்தவரையோ உயிருடன்
விட்டு வைக்காவிட்டாலும்
உலகில் தோன்றிய உயிர்கள்
என்றும் என் உறவுகளே।
இறைவன் எனக்கு அளிக்காது
விட்டாலும் உறவுகளை
நானாக உருவாக்கும்
யுக்திழயக் கற்றுக் கொண்டேன்।
புதிய உறவுகளை
உருவாக்கும் பணி இலகுவானாலும்,
அவை நிலைக்க செய்வது
கடினமே।
நான் ஒரு உறவை நினைக்க
கிடைக்கும் உறவுகளோ
என்னிடம் பிறிதொன்றை
எண்ணுவதேன்?
உண்மையான அன்பை
உறவுகளில் காணவில்லையே
ஏன்?
களங்கமில்லா அன்பை
உணரத் தெரியவில்லையா
அப்பா, அண்ணா, தம்பி என
நான் உணர்வுபூர்வமாய் எண்ணினாலும்
ஏன் ஆண்களால்
முடிவதில்லை அவை?
தன்வீட்டுப் பெண் தான்
பிள்ளையா உனக்கு
மற்றவர் வெறும் போகப்
பொருளா மானிடா?
பெண்கள் அனைவரும் என்றும்
பெண்களே என்று
புரிந்து கொள்வாயா
ஆணினமே......
இது தான் பெண்களுக்கு
கடவுளிட்ட வரமா?
No comments:
Post a Comment